மருத்துவர்களுக்கு ஆதரவாக உறுப்பினர்களின் இல்லங்களில் 22.04.2020 இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்.
மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.
மருத்துவர் உடலடக்கம் எதிர்ப்பு இந்தியமருத்துவக்
கழகம் 22.04.2020 இரவு 9.00மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்றுவதைத் தொடர்ந்து தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் ஆதரவு தெரிவித்து மருத்துவர்களுக்காக தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் குடும்பங்களில் மெழுகுவர்த்தி ஏற்றி நாம் என்றென்றும் மனிதஉயிர்களைக் காப்பாற்றும் மருத்துவர்களுக்கு உறுதுணையாய் இருப்போம்.தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநில,மாவட்ட,ஒன்றிய, வட்டார நிருவாகிகள் அனைவரும் அவரவர் இல்லங்களில் மெழுகுவர்த்தி ஏற்றுவதோடு உறுப்பினர்கள் அனைவரும் இல்லங்களில் மெழுகுவர்த்தி ஏற்றுவதற்கு வசதியாக மாநிலமையத்தின் தகவலை அறிவுறுத்திடும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
98845 86716
No comments:
Post a Comment