இன்று தமிழ்நாடு அரசு செய்தி அறிக்கையில் LKG முதல் 5 ஆம் வகுப்புவரை அனைத்துத் தொடக்கப்பள்ளிகளுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பின் பரவல் காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.அதில் அங்கன்வாடி மையங்கள் விடுபட்டிருக்கிறது. தொலைபேசி மூலம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். தொடக்கப்பள்ளிக்குள் அங்கன்வாடி(முன் மழலையர் வகுப்புகள்) அடங்கும் என்றாலும் அது தனியாக இயங்கிவருவதால் பெற்றோர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகையால் குழப்பத்திலிருந்து விடுவிக்க அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகளுக்கும் பொருந்தும் என்று அறிக்கை வெளியிட தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 98845 86716
No comments:
Post a Comment