Pages

Pages

Monday, March 23, 2020

கொரோனா பாதிப்பு பரவலைத் தடுத்திட மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு தமிழக அரசின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் - வரவேற்பு. மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.





கொரோனா பாதிப்பு பரவலைத் தடுத்திட மாநிலம் முழுவதும்
ஊரடங்கு உத்தரவு  தமிழக அரசின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் - வரவேற்பு.
மாநிலத்தலைவர்
பி.கே.இளமாறன் அறிக்கை.

கொரோனா வைரஸ்  தீவிரப்பாதுகாப்பு நடவடிக்கையாக நாளை மாலை 6 மணிமுதல்  வருகின்ற 31ம்தேதி வரை மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் மாண்புமிகு முதலமைச்சர்  சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களுக்கும் வாழ்த்துகளை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நன்றியும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும்,ஊரடங்கு மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  எடுத்து  கொரோனா வைரஸ் பரவல் முழுமையாக தடுப்பு நடவடிக்கையாகவும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கையினை ஏற்று   மாண்புமிகு முதல்வர் அவர்கள் உடனடி நடவடிக்கை எடுத்து   26 ஆம் தேதி நடக்க இருந்த  11 ஆம் வகுப்புத் தேர்வினை ஒத்திவைத்தது பெற்றோர்கள் மாத்தியில் மன நிறைவு ஏற்படுத்தியது சிறப்பு. மேலும் கல்லூரித்தேர்வு தேர்வாணையத் தேர்வுகள் அனைத்தையும் தள்ளிவைத்து ஒட்டுமொத்த தமிழக மக்களை காப்பாற்ற தமிழ்நாடு அரசு தெளிவான அறிக்கை வெளியிட்டு அனைத்துத் தரப்பு  மக்களிடையே நம்பிக்கையினை ஏற்படுத்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதோடு அரசின் சிறப்பான நடவடிக்கைக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்  உறுதுணையாக இருக்கும்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்.
98845 86716

No comments:

Post a Comment