Pages

Pages

Tuesday, March 17, 2020

ஆசிரியர்-அரசு ஊழியர்களுக்கு 4 % அகவிலைப்படி வழங்கிட தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள். மாநிலத்தலைவர் பிகே.இளமாறன் அறிக்கை.





ஆசிரியர்-அரசு ஊழியர்களுக்கு 4 % அகவிலைப்படி வழங்கிட தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள். 
மாநிலத்தலைவர் பிகே.இளமாறன் அறிக்கை.

 
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாநில அரசின் கீழ்ப்பணிபுரியும் ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப் படியினை உயர்த்தி வழங்கிட தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். மேலும் அகவிலைப்படி என்பது ஆறு மாதத்திற்கு ஒருமுறை விலைவாசி ஏற்றம்-இறக்கம்  அடிப்படையாகக் கொண்டு புள்ளியியல் அடிப்படையில் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்-அரசு ஊழியர்கள், ஓய்வூதியத்தாரர்கள், குடும்ப ஓய்வூதியத்தாரர்கள் உள்ளிட்ட 18 லட்சம் ஆசிரியர்- அரசு ஊழியர்கள் குடும்பங்கள் மொத்தம் ஒன்றரை கோடி பேர் பயன்பெறுவார்கள்.
 ஆகையால்,  ஆசிரியர்-அரசு ஊழியர்கள் அரசின் நலத்திட்டங்களை கடைகோடி குடிமகனுக்கும் எடுத்துச்செல்லும் பணியினை சிறப்பானமுறையில்  செய்துவருவது அனைவரும் அறிந்ததே. மத்திய அரசு அறிவித்துள்ள 4% அகவிலைப் படியினை மாநில ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு உயர்த்தி வழங்கிட  ஆவனசெய்யும்படி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை   தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன்.

பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 98845 86716

No comments:

Post a Comment