Pages

Pages

Wednesday, March 18, 2020

மாணவர்களின் பாதுகாப்புக்கருதி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை ஜுன் மாதத்தில் நடத்திட வேண்டும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள். மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.







மாணவர்களின் பாதுகாப்புக்கருதி
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை ஜுன் மாதத்தில் நடத்திட வேண்டும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்.
மாநிலத்தலைவர்
பி.கே.இளமாறன் அறிக்கை.
    உலகம் முழுவதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் எளிதில் தொற்றும் கொரோனா வைரஸ்
சீனாவில் தொடங்கி இத்தாலி ஈரான் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட. நாடுகளில் விஸ்வரூபம் எடுத்து இந்தியாவையும் விட்டுவைக்க வில்லை. கர்நாடகா,டெல்லி மும்பையில் தலா ஒருவர் வீதம் மூன்றுபேரை பலிவாங்கியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுத்திட.  பள்ளிகள்,கல்லூரிகள்,விளையாட்டு அரங்குகள்,மால்கள்  உள்ளிட்ட மக்கள்கூடும் இடங்களை மார்ச் 31 வரை விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருவது வரவேற்புக்குரியது.
    தற்போது கொரோனா தமிழ்நாட்டினை தாக்காமல் தடுத்திட வகையில் பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசு சிறப்பாக எடுத்துவருகிறது என்பது மிகையாகாது.
    மேலும் 11,12, ஆம் வகுப்பு  அரசுப்பொதுத்தேர்வு நடந்துவருகிறது.மேலும் மார்ச் 27 ந்தேதி பத்துலட்சத்திற்கும் மேற்பட்ட10 ஆம்  மாணவர்கள் தேர்வு எழுத உள்ளதால் கொரோனா பீதியால்   பெற்றோர்களும் மாணவர்களும் அச்சத்தில் உள்ளார்கள்.கொரோனா வைரஸ் தொற்று நோய் என்பதால் வரும்முன் காப்போம் என்ற அடிப்படையில் பாதுகாப்பது அவசியம். 200 பேருக்கு பரவினால் 2000 பேருக்கு பரவிவிடும். பள்ளிகளில் மாணவர்களின் நலன்கருதி தினந்தோறும் கிருமிநாசினி தெளித்து முன்னெச்சரிக்கை மேற்கொண்டாலும் தனிமைப்படுத்துதலே சிறந்த தற்காப்பு நடவடிக்கையாகும்.ஆகையால் ஒன்பதாம் வகுப்புவரை அனைவருக்கும் தேர்ச்சியளித்தும்,.மேலும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வினை ஜுன் மாதம் நடத்திட  ஆவனசெய்து தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் இல்லா நிலையினை உறுதிச்செய்யும் வகையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்  துரித நடவடிக்கை எடுத்து  கொரோனா வைரஸை  கொடுமையிலிருந்து  தமிழக மக்களை காப்பாற்றிடும்
 நடவடிக்கையாக    "சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும்" தற்காப்பு முன்னெச்சரிக்கை  நடவடிக்கையாக ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சியளித்தும்,10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வினை ஜுன் மாதத்திற்கு தள்ளிவைத்திட வைத்திடவேண்டும்.மேலும் 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடக்கவிருக்கும் இரண்டுத்தேர்வுகளையும் இரண்டு வாரங்கள் தள்ளிவைக்கவும் ஆவனசெய்ய தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில்  வேண்டுகின்றோம்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்.9884586716

No comments:

Post a Comment