தமிழ்நாடு நிதி-நிலை அறிக்கையில் பள்ளிக்கல்வித்துறைக்கு 34,181,73 கோடி நிதி ஒதுக்கீடு வரவேற்பு- 644, 69 கோடி தனியார் பள்ளிக்கு தாரை வார்ப்பது ஏற்புடையதுல்ல.
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.
தமிழ்நாடு அரசின் 2020-2021 நிதி-நிலை அறிக்கை யில் பள்ளிக்கல்வித்துறைக்கு 34,181,73 கோடி நிதி ஒதுக்கீடு செய்தமைக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்கிறது.அதில் 1,018,39 கோடி ரூபாய் மாணவர்களின் விலையில்லாப்புத்தகம்,சீருடை, கல்வி உபகரணங்கள் ஆகியவற்றுக்கும் மடிக்கணினி வழங்கிட 966.39 கோடியும் 158 உயர்,மேனிலைப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட 277.88 கோடியும்,சமக்ரா சிக்சா திட்டத்திற்கு 3,202.49 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது வரவேற்புக்குரியது. அதேவேளையில் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009 ன்படி 25% தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்காகவும் அதற்குரிய கட்டணமாக மான்யத்தொகையுடன் சேர்த்து 644,69 கோடி ரூபாயினை தாரைவார்ப்பது ஏற்புடையதல்ல. கல்வி ஆண்டிற்காக. 76,927 மாணவர்களை தனியார்பள்ளிகளுக்கு உறுதிசெய்து தருவது அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பெற்றோர்கள் மத்தியில் ஆர்வத்தைக் குறைக்கும். அத்தொகையினை அரசுப்பள்ளிகளை மேம்படுத்தப்பயன்படுத்தலாம்.
மேலும் ஆசிரியர்-அரசு ஊழியர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் 21 மாத நிலுவைத்தொக்காக நிதி ஒதுக்கீடு பற்றி எவ்வித அறிவிப்பும் இல்லை குறைந்தபட்ச ஒன்பது மாதத்திற்காக நிலுவைத்தொகை வழங்கிட நிதி ஒதுக்காதது வருத்தமளிக்கின்றது. தமிழ்நாட்டில் செயல்படும் அரசு-அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 58,474 பள்ளிகளில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் தொடர்ந்து வலியுறுத்திவரும்
தற்போதை புதியப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் குறைந்தபட்சம் ஒருபள்ளிக்கு ஒரு சுமார்ட் கிளாஸ் அல்லது ஒரு ஆண்ட்ராய்டு டிவி வழங்குவதற்கான அறிவிப்பு இல்லை.அதனை பள்ளிக்கல்வித்துறை மான்யக்கோரிக்கையிலாவது அறிவித்திடவேண்டும்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 98845 86716
No comments:
Post a Comment