Pages

Pages

Saturday, February 29, 2020

சி.பி.எஸ்.சி பள்ளிகளிலும் 25 % இடஒதுக்கீடு அமைச்சர் அறிவிப்பு அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைப் பாதிக்கும் - அரசே முன்னின்று நடத்துவதை கைவிடுக. தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை :



"தமிழக அரசு ஆண்டுதோறும் சுமார் 1 லட்சம் மாணவர்களைத் தனியார் பள்ளிகளுக்கு
தாரைவார்த்துக் கொடுத்து வருவதோடு ஆண்டுதோறும் ரூ. 100 கோடிக்கு மேல் பணமும் தனியார் பள்ளிகளுக்கு கல்விகட்டணத்தொகை
வழங்கப்பட்டுவருகிறது இதனால் எதுக்காக 25 % கொண்டுவரபட்டதோ நிறைவேறவில்லை. பதிலாக
 அரசு பள்ளிகள்மூடும் அபாயம் தான் ஏற்பட்டுள்ளது.மேலும்
 தனியார் பள்ளியில்தான் தரமான
கல்வி கிடைக்கும் என்று அரசாங்கமே சொல்கிறது என்று பெற்றோர்கள் நினைக்க
ஆரம்பித்துவிட்டனர்.

முன்பெல்லாம் தனியார் பள்ளிகளே இட ஒதுக்கீட்டு முறையை மேற்கொண்டன. முதன்மைக்
கல்வி அலுவலரும் மாவட்டக் கல்வி அலுவலரும் அதைக் கண்காணித்தனர். ஆனால் 4 ஆண்டுகளாக
இடங்களை ஒதுக்கும் திட்டத்தை அரசே கையில் எடுத்துள்ளது. அவர்களுக்கான கல்விக்
கட்டணத்தையும் செலுத்திவிடுகிறது. இதனால் பெற்றோர்களுக்கு 'கரும்பு தின்னக் கூலியா?'
என்ற நிலை உருவாகிறது.

ஆனால் அரசுப்பள்ளிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தெருத்
தெருவாக அலைந்து வீடு வீடாகச் சுற்றி மாணவர்களைச் சேர்க்கின்றோம். ஆனால் அரசின்
செயலால் அரசுப் பள்ளிகள் மீதான மரியாதை பெற்றோர்களுக்குப் போய்விடுகிறது. சேர்க்கையும்
குறைந்துவிடுகிறது இதனால் போதிய மாணவர்கள் இல்லாமல் அரசுப் பள்ளிகள் மூடப்படும்
அபாயம் அதிகரித்து வருகிறது.
மொத்தத்தில் 25% இட ஒதுக்கீடே கூடாது என்பது என்னுடைய கருத்து. கல்வியை அரசுதான்
ஏற்று நடத்தவேண்டும். அப்போதுதான் அதில் சமதர்மத்தை நிலைநாட்டமுடியும்.
அரசுப்பள்ளிகளைக் காப்பாற்ற குறைந்தபட்சம்
அரசே இட ஒதுக்கீட்டின் மூலம் தனியர் பள்ளியில் சேர்க்கும்  நடவடிக்கையாவது அரசு தவிர்க்க வேண்டும்" ஆனால் தற்போது சிபிஎஸ்சி பள்ளிகளிலும் வரும் கல்வியாண்டு முதல் 25% இடஒதுக்கீடு மூலம் சேர்கக்படும் என்ற அமைச்சரின் அறிவிப்பு அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பெரிதும் பாதிக்கும் என்பதால் தனியார் பள்ளிகளில் மாணவர்களை  தாரைவார்க்கும் திட்டத்தினை கைவிட்டுவிட்டு அரசுப்பள்ளிகளை மேம்படுத்திட தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்
பி.கே.இளமாறன்.
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 98845 86716

No comments:

Post a Comment