Pages

Pages

Monday, January 13, 2020

தமிழர் திருநாளை சிறப்பாக கொண்டாடிட போகி நாளை விடுமுறை அறிவிக்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.

தமிழர் திருநாளை சிறப்பாக கொண்டாடிட போகி நாளை விடுமுறை அறிவிக்க  தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்
மாநிலத்தலைவர்
பி.கே.இளமாறன் அறிக்கை.
   தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையினை சிறப்பாகக் கொண்டாடிட. பொங்கல் முன் நாளான போகி நாள் 14-01 -2020 அன்று தமிழக அரசு பொதுவிடுமுறையாக அறிவிக்க வேண்டுகிறோம். தைத்திருநாளை உழவர்களின் உழைப்பினை போற்றும் வகையில் பொங்கல் கொண்டாடி வருகின்றோம்.  இந்நாளொல் பொங்கலோடு மகிழ்ச்சிப் பொங்கிட குடும்பத்தோடு கொண்டாடுவதற்கு ஆசிரியர்-அரசு ஊழியர்கள் மாணவர்களுக்கு போகி நாள் விடுமுறை இல்லாததால் சிரமத்தோடு உள்ளார்கள். மேலும் ஆதிதிராவிட ர் மற்றும் பிற்படுத்தப்பட்ட1200  விடுதிகளில் சுமார் 10'000 க்கும் மேற்பட்ட  மாணவர்களும் ஆசிரியர்-அரசு ஊழியர்கள் 60 சதவீதத்திற்கும் மேலானோர் சொந்த மாவட்டத்தை விட்டுவிட்டோ வெவ்வேறு மாவட்டங்களில் பணிபுரிவதாலும் பொங்கல் பண்டிகை கொண்டாடிட வாய்ப்பில்லாமல் போகிறது. எனவே தமிழக அரசு வெளிமாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்து ஏற்பாடு செய்வதுபோல பயணம் செய்ய ஏதுவாக முன்கூட்டியே தமிழர் திருநாளை கொண்டாடிட 14.01.2020 ஆம் நாளை விடுப்பு அளிக்க தமிழ்நாடு ஆசொரியர் சங்கம் சார்பில் வேண்டுகின்றோம். போகிநாளை ஈடுசெய்யும் விடுப்பாக அறிவித்து தமிழக அரசு அறிவிக்கும் ஏதாவது ஒரு சனிக்கிழமையில் வேலை செய்திட தயராக உள்ளோம். எனவே மாண்புமிகு முதல்வர் அவர்கள் 14.01.2020 நாளுக்கு விடுமுறை வழங்கிட ஆவனசெயும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 98845 86716

No comments:

Post a Comment