Pages

Pages

Monday, December 30, 2019

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணிக்கு பட்டதாரிகளை பயன்படுத்திட தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை : மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணிக்கு பட்டதாரிகளை பயன்படுத்திட தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை :
மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.
 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு (சென்செஸ் )
   நாடு முழுவதும் 2020-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 30-தேதி வரை ஒவ்வொரு வீட்டிலும் கணக்கெடுப்பு நடத்தப்படும்.
1948-ம் ஆண்டு சென்சஸ் சட்டம் கொண்டுவரப்பட்டதில் இருந்து ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை  மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்தக் கணக்கெடுப்பில் பல்வேறு புள்ளிவிவரங்கள் கேட்கப்பட்டு பொருளாதார விவகாரங்களுக்காகவும், அரசின் சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத்தவும் பயன்படுத்தப்படும்.
கடைசியாக கடந்த 2010-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. சுமார் 30க்கும் மேற்பட்ட விவரங்கள் மக்களிடம் கேள்விகளாக கேட்டு படிவத்தினை பூர்த்திசெய்வது ஒவ்வொரு வீட்டிற்கும் குறைந்தபட்சம் அரைமணி நேரமாகும்.   நாட்டின் வளர்ச்சி எவ்வாறு கடந்த 10 ஆண்டுகளில் இருந்தது என்பதை அறிவதற்காக எடுக்கப்படுவதாகும். நாட்டின் வளர்ச்சி குறித்து அறியவும், மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் சென்று சேர்ந்துள்ளனவா என்பதற்கும் எதிர்காலத் திட்டமிடலுக்கும் பயன்படும்.
 மக்களின் பிறப்பு, இறப்பு குறித்த உறுதியான தகவல், பொருளாதார நடவடிக்கை, கல்வியறிவு, கல்வியின் நிலை, சொந்த வீடு, வீட்டில் உள்ள வசதிகள்,  எஸ்சி, எஸ்டி கணக்கெடுப்பு, மொழி, மதங்கள், மக்கள் இடப்பெயர்வு, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் இடம் பெறும்.
மேலும், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், அவர்களின் பாலினம், தொழில் வகை, பகுப்பு, சிறு, குறுந்தொழில்,  வியாபாரம், தொழில், அதில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், பாலினம் ஆகியவை இடம் பெறும்
 கல்வித்தகுதி, நகரங்கள குடிசைப் பகுதிகள்,, வீடு இருந்தால் அது கான்கிரீட் வீடா அல்லது எப்படிப்பட்ட வீடு உள்ளிட்ட விவரங்கள்  சேகரிப்பு  .இப்பணி ஆசிரியர் அரசு ஊழியர்கள் சத்துணவு பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறது.பெரும்பாலும் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதால் கல்விப்பணி பெரிதும் பாதிப்பிற்குள்ளாகிறது. அரைநாள் முழுவதும் எடுத்தால் கூட 10 வீடுகள் முடிப்பது கூட சிரமம் பணி செய்வதால் தொடர்ச்சியாக ஆறுமாத காலம் பள்ளியில் ஆசிரியர்கள் இல்லாமல் போவதாலும் குறைந்தபட்சம் 60,000 ஆசிரியர்களுக்கும் மேலாக ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள் கடந்த காலங்களில் பெரும்பாலும் கற்பித்தல் பணி பாதிக்கப்பட்டதால் முன் கூட்டியே இப்பணியினை முழுநேர வேலையாக மாற்றி படித்து வேலையில்லாமல் காத்திருக்கும் பல லட்சம் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு வேலை கொடுத்த மாதிரியும் இருக்கும் அவர்கள் வாழ்வில் கொஞ்சம் பொருளாதாரத்தினை உயர்த்திடவும் வழிவகுக்கும் என்பதால் மக்கள் தொகைக்கணக்
கெடுப்பு பணி தொடங்குவதற்கு முன்பே சிறந்த திட்டமிடலுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலமாக தேர்வு செய்து பணி ஒதுக்கிட ஆவனசெய்து கற்பித்தல்பணி சிறந்து விளங்க வாய்ப்பு வழங்குமாறு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
98845 86716

No comments:

Post a Comment