Pages

Pages

Sunday, November 10, 2019

மன உளைச்சலின்றி பணிபுரிய பட்டதாரி ஆசிரியர் இடமாறுதல் -பதவி உயர்வு கலந்தாய்வினை உடனே அறிவித்திடுக : தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் : மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை :




மன உளைச்சலின்றி பணிபுரியபட்டதாரி ஆசிரியர் இடமாறுதல் -பதவி உயர்வு கலந்தாய்வினை உடனே அறிவித்திடுக :தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் :மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை : 


தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை கடந்தகாலங்களில் ஆசிரியர் இடமாறுதல்- பதவி உயர்வு பொதுக்கலந்தாய்வு மே மாதத்தில் நடத்தப்பட்டு ஜுன் மாதத்தில் பணியேற்பார்கள்.  கற்றல்-கற்பித்தல் தடையின்றி சிறப்பாக நடைபெற்றது. மூன்றாண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரிந்திருந்தால் மட்டும் இடமாறுதல் உள்ளிட்ட  வழக்குகள் என பொதுக்கலந்தாய்வு நடைபெறாமல் காலாண்டுத்தேர்வும் முடிவடைந்த நிலையில் ஆசிரியர்களின்றி பதினொன்று பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளார்கள்.மேலும், அனைத்து வழக்குகளும்  சென்னை உயர்நீதிமன்றத்தில்  முடித்து வைக்கப்பட்டு இறுதி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பதவி உயர்வு, பணி நிரவல் பெற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்றாண்டு விதிமுறையை தளர்த்தி 2019-20 ஆம் ஆண்டு கலந்தாய்வில் கலந்துக்கொள்ள அனுமதித்து உத்தரவிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து உயர்நிலைப்பள்ளிகளில் 400 தலைமையாசிரியர் பணியிடங்களும் மேல்நிலைப்பள்ளிகளில் 600 தலைமையாசிரியர் பணியிடங்களும் மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான  இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு 11.11.2019 முதல் 24.11.2019  நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறையும் அனைத்துவகை ஆசிரியர்களுக்கு இடமாறுதல்- பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படும் என்று தொடக்கக்கல்வித்துறையும் அறிவித்துள்ளதை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்   நன்றியுடன் வரவேற்கின்றோம். அதேவேளையில், பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்விற்கான அறிவிப்பு வெளியிடாதது மிகுந்த மனவேதனையளிக்கிறது. இந்த ஆண்டிலாவது குடும்பத்துடன் இருந்து மனநிறைவோடு ஆசிரியர் பணித்தொடர வாய்ப்புவரும் என காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்களின் தேவைகளை பூர்த்திசெய்திடும் வகையில் பட்டதாரி ஆசிரியர் இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வினை உடனே நடத்திட போர்க்கால அடிப்படையில்  நடவடிக்கை மேற்கொள்ள மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன். 

பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
 98845 86716

No comments:

Post a Comment