சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது : விண்ணப்பங்கள் வரவேற்பு..!
தமிழ்நாடு அறிவியல் நகரத்தின் சார்பில் 10 அறிவியல் ஆசிரியர்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசுத் தொகையுடன் அளிக்கப்படும் சிறந்த அறிவியல் ஆசிரியருக்கான விருதிற்கு வரும் ஏப்ரல் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழக அரசின் சார்பில், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், இயற்கை அறிவியல் போன்ற அறிவியல் சார்ந்த துறைகளில் சிறந்த ஆசிரியர்களுக்கு, விருது மற்றும் ரூ. 25 ஆயிரம் பரிசுத் தொகையும் வழங்கப்படும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கென நிதியும் ஒதுக்கப்பட்டிருந்தது.
தற்போது, அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பணியாற்றும் ஆசிரியர்களிடம் இருந்து இந்த விருதிற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த விருதிற்கு ஏப்ரல் 5-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுள்ள ஆசிரியர்கள், "துணைத் தலைவர், அறிவியல் நகரம், பிர்லா கோளரங்க வளாகம், காந்தி மண்டபம் சாலை, சென்னை- 25" என்னும் முகவரிக்கு தங்களுடைய விருப்ப மனுவினை அனுப்பிவைக்க வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment