Pages

Pages

Sunday, October 20, 2019

தொடர்வேலைகள் அரசுப்பள்ளிகளில் கற்றல்-கற்பித்தல் பணி பெரும்பாதிப்பு: நடவடிக்கை எடுத்திட தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை




தொடர்வேலைகள் அரசுப்பள்ளிகளில் கற்றல்-கற்பித்தல் பணி பெரும்பாதிப்பு: நடவடிக்கை எடுத்திட தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசுப்பள்ளிகள் 37,358 அரசு உதவிப்பெறும் பள்ளிகள் 8,386 என தொடக்க,நடுநிலை,உயர்நிலை,  மேல்நிலைப்பள்ளிகள் மொத்தம் 45,744 பள்ளிகளில்  முறையே அரசுப்பள்ளிகளில் 54,71,544 மாணவர்களும், அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 28,44,693 மாணவர்களும் பயின்றுவருகிறார்கள்.
  
மிகச்சிறந்த முறையில் பாடத்திட்டம் மாற்றியமைத்து புதியப்பாடத்திட்டம் தரமான கல்வியினை அளிப்பதில் பள்ளிக்கல்வித்துறை  மேலோங்கியுள்ளது. ஆனால் அப்பாடத்திட்டத்தினை மாணவர்களுக்கு எடுத்துச்செல்ல ஆசிரியர்களுக்கு முழு வாய்ப்பளிக்க வேண்டும் அப்போதுதான் கற்றல்-கற்பித்தல் பணிச்சிறப்பாக நடந்து அரசுப்பள்ளிகளில் கல்வித்தரம் உயரும்.தற்போது பரவலாக அரசுப்பள்ளிகள் குறித்தும் ஆசிரியர்களைக்குறித்தும் கல்வித்தரமில்லை என்று தவறாகச்சித்தரித்து வருவது வேதனையளிக்கிறது.வருடம் முழுதும் பல்வேறு பணிகளில் ஈடுபடசெய்து இடையிடையே கற்பித்தல்பணி நடைபெற்றால் அரசுப்பள்ளிகளில் கல்வித்தரம் உயரும்?  
  அலுவலர்கள் ஊழியர்கள் கணினி உதவியாளர்கள் இல்லாததால் அவர்கள் செய்யவேண்டியப் பணிகளை ஆசிரியர்களை மேற்கொள்ளச் செய்வதால் கற்பித்தல் பணி பாதிக்கிறது.மாணவர்களுக்கு ஆதார் அட்டை,சாதிச்சான்றிதழ், சிறுபான்மை மற்றும் ஆதிதிராவிடர் உதவித்தொகை, வாக்காளர் சரிபார்ப்பு பணிகளான BLO,DLO இதுத்தவிர அரசுவழங்கும் 14 வகையான சலுகைகள், திறன் தேர்வு இணையதளத்தில் பதிவுசெய்தல் EMIS கல்வி மேலாண்மை தகவல் முகமை உள்ளிட்ட தொடர்பணிகளுக்கிடையே ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் என  அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட்டுவருகிறார்கள். மேற்கண்டப் பணிகள் எதுவும் தனியார் மெட்ரிக் பள்ளிகளின் ஆசிரியர்கள் செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 மேலும், தற்போது மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் கடந்த 14.10.2019 முதல் ஆசிரியர்களுக்கு 5 நாள்கழ் பயிற்சி நடைபெற்று வருகிறது. வாரந்தோறும் இரண்டு மூன்று ஆசிரியர்கள் பாயிற்சியென்பதால் கற்றல்-கற்பித்தல் பெரும்பாதிப்பிற்குள்ளாகுகிறது.இப்பயிற்சிகள் மாநிலப் பாடத்திட்டத்தில் நடத்தும் தனியார் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கு இல்லை. எனவே அரசுப்பள்ளிகளை மேம்படுத்த அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வித்தரத்தினை உயர்த்திட அரசுப்பள்ளி ஆசொரியர்களுக்கு முழுமையாக கற்பித்தல் பணிசெய்திட வாய்பப்பளிக்கும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். மேலும் அரசுப்பள்ளிகளில் தேவையான அலுவலக ஊழியர்கள் கணினி உதவியாளர்களை நியமித்திடவும், மாணவர்களின் கல்வியினைப் பாதிக்கும் மத்திய  மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் நடத்தும் தேசிய அளவில் பள்ளித்தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் மேம்பாட்டுத்திறனிற்கான முன்னெடுப்பு (நிஷ்தா) பயிற்சியினை ஐந்து நாள்களிலிருந்து இரண்டு நாளாக குறைத்திட நடவடிக்கை எடுத்திடவும் அரசுப்பள்ளிகளில் கல்வித்தரம் உயர்ந்திட அரசுப்பள்ளி ஆசிரியர்களை முழுமையாக கற்பித்தல் பணி மட்டும் செய்திட வாய்ப்பளிக்கும்படி மாண்புமிகு.முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிந்து வேண்டுகின்றேன்.

பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 98845 86716

No comments:

Post a Comment