Pages

Pages

Sunday, September 15, 2019

ஆசிரியர் பணி சேவைக்கானது: பள்ளி கல்வி இணை இயக்குனர் பேச்சு

'மற்ற துறைகளில், பணி என்பது கடமையாக இருக்கும். ஆசிரியர் பணி என்பது சேவைக்கானது,'' என, பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் குமார் பேசினார்.மாவட்ட அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும், 124 தலைமையாசிரியர்களுக்கான தலைமை பண்பு குறித்த பயிற்சி முகாம், நாமக்கல் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் உஷா தலைமை வகித்தார். பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் குமார் பேசியதாவது: தலைமையாசிரியர்கள், பள்ளிக்கு வரும் குழந்தைகளிடத்தில் கனிவாக நடந்து கொண்டு, அவர்களின் எண்ண ஓட்டத்தை மாற்ற வேண்டும். மாணவர்களை மட்டும் கவனித்தால் போதாது, ஆசிரியர்களிடத்திலும் கவனம் இருக்க வேண்டும்.
மற்ற துறைகளில் வேண்டுமானால், பணி என்பது கடமையாக இருக்கும். ஆனால், ஆசிரியர் பணி என்பது சேவைக்கானது. இவ்வாறு, அவர் பேசினார்.எஸ்.பி., அருளரசு பேசியதாவது: ஒவ்வொருவரும், ஏதாவது ஒரு நேரத்தில் தவறிழைக்கலாம். இருப்பினும், தனி மனித ஒழுக்கம் என்பது எல்லை மீறக் கூடாது.

தனி மனித ஒழுக்கத்தை மாணவர்களுக்கு மட்டும் சொல்லிக் கொடுத்தால் போதாது, ஆசிரியர்களும் பின்பற்ற வேண்டும். தலைக்கவசம் போடுமாறு போலீஸ் தரப்பில் அறிவுறுத்துகிறோம்; எச்சரிக்கிறோம். சிலர் மட்டுமே பின்பற்றுகின்றனர். பலர் போலீசாரை ஏமாற்றுவது போல், தங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். மாணவ, மாணவியரிடம் நல்லொழுக்கத்தை போதிக்கும் வகையில், ஆசிரியர்கள் செயல்பட வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். மாவட்ட கல்வி அலுவலர்கள் உதயகுமார், ரமேஷ், தலைமையாசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment