Pages

Pages

Friday, September 13, 2019

5 மற்றும் 8ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கருத்து : மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.


    தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணை 164. ல் 2019-2020 ஆம் கல்வியாண்டில் மாநிலப்பாடத்திட்டத்தில் நடக்கும் அனைத்துவகை பள்ளிகளில் படிக்கும் 5 மற்றும் 8 ஆம்  வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கான அரசாணையில் முதல் மூன்று ஆண்டுகளுக்கு தேர்ச்சி நிறுத்துதல் கூடாது என்பதை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்கிறது. இது போன்ற தேர்வுகள் மூலம்  மாணவர்களிடையே தன்னம்பிக்கை வளர்க்கும்.அதே வேளையில் தேர்வு ஒழுக்கமும் தேர்வினைப்பற்றிய அச்சமும் தவிர்க்கும்.இதுபோன்ற பொதுத்தேர்வுகள் மாவட்ட அளவில் கடந்த காலங்களில் நடத்தப்பட்டு வந்தது. 
  தற்போது கட்டாயக்கல்வி உரிமை  சட்டத்தின் அடிப்படையில் இந்த பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகிறது என்று அரசாணை 164 ல் குறீப்பிடுகிறார்கள். அப்படியானால் மாநில அளவில் தேர்வுத்துறை மூலமாக 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுமா என்று தெளிவாக குறிப்பிடப்படவில்லை.அவ்வாறு மாநில அளவில் மாணவர்களுக்கு தேர்வு நடத்தினால் மாணவர்களின் மனநலம் பாதிப்பதோடு ஒருவிதமான அச்சத்தை ஏற்படுத்தும். 
இது மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.ஆகையால், ஏற்கனவே நடைமுறையில் உள்ளவாறும் மேலும் மாவட்ட அளவில் நடத்தப்படும் பொதுவான தேர்வு என்பதை பள்ளிக்கல்வித்துறை தெளிவுபடுத்திடவேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்.

No comments:

Post a Comment