Pages

Pages

Thursday, August 8, 2019

அரசுபள்ளிகளை மூடுவதை கைவிடுக - தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை.


மாநிலத்தலைவர்
பி.கே.இளமாறன் அறிக்கை:
    தமிழ்நாட்டில் செயல்படும் அரசு தொடக்க,நடுநிலைப்பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லையென்று 46 பள்ளிகளை மூடிட தமிழ்நாடு அரசு எடுத்திருக்கும் முடிவு அதிர்ச்சியளிக்கிறது .
   வரும் 10 ந்தேதிக்குள் 46 மாநில முழுதும் உள்ள தொடக்க நடுநிலைப்பள்ளிகளை மூடிட முனைப்புக் காட்டிடும் அரசு அப்பள்ளிகளில் ஏன் மாணவர்கள் சேரவில்லை என்பதை ஆராய தவறியது வருத்தமளிக்கிறது. அரசுபள்ளிகளை மேம்படுத்திடவும் புதியதாக தொடங்கும் மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்க கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.அதுமட்டுமில்லாமல் தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க அனைவருக்கும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி 25% இட ஒதுக்கீடு அடிப்படையில் அரசே முன்வந்து ஆன் லைன் மூலமாக விண்ணப்பம் பெற்று மாணவர்களை சேர்த்துவிடுவது மட்டுமின்றி 100 கோடி ரூபாய்க்கும் மேலாக கட்டணமும் வழங்கிவருவது வேதனையளிக்கிறது.
    இதுபோன்று ஆண்டுக்கு 1,21,000 மாணவர்களை தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு தாரைவார்த்துவிட்டு அரசு பள்ளிகளில் மாணவர்களில்லை அதனால் பள்ளிகளை மூடிவிட்டு நூலகங்களாக மாற்றுவது ஏற்புடையது அல்ல. இந்நிலை நீடித்தால் எதிர்காலத்தில் அரசு பள்ளிகள் அனாதையாகிவிடுவதோடு மூடப்படும் அபாயம் ஏற்படும். ஆகையால் தமிழக அரசு அரசு பள்ளிகளை மூடுவதை கைவிட்டுவிட்டு போதிய வசதியின்றி அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 3000 க்கும் மேற்பட்ட தனியார் மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அரசுபள்ளிகளில் சேர்த்திட நடவடிக்கை மேற்கொள்ள மாண்புமிகு. முதலஅமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன்  கேட்டுக்கொள்கின்றேன் .
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 98845 86716

No comments:

Post a Comment