Pages

Pages

Monday, August 12, 2019

சிபிஎஸ்ஸி யில் படிக்கும் எஸ்.சி எஸ்.டி மாணவர்களின் புதிய தேர்வுகட்டணத்தை திரும்ப பெறுக. தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை

மாநிலத்தலைவர்
பி.கே.இளமாறன் அறிக்கை.
 மத்திய பள்ளிக்கல்வி வாரிய (CBSE) த்தின் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு கட்டணத்தை SC/ST மாணவர்களுக்கு  பன்மடங்கு அதாவது  50 ரூபாயிலிருந்து 1200 ரூபாயகவும், பொதுப் பிரிவு மாணவர்களுக்கு 750 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாகவும் உயர்த்தியிருப்பது வேதனையளிக்கின்றது. கல்வியினை அரசாங்கமே இலவசமாக வழங்க வேண்டும் ஆனால்  கூடுதல் சுமையாக குறிப்பாக தாழ்த்தப்பட்ட பழங்குடி மாணவர்கள் இந்த தலைமுறையில்தான் முன்னேற்றம் கொஞ்சம் ஏறி வருகையில் அவர்களுக்கு 2019-20 ஆம் கல்வியாண்டில்  இதுவரை இருந்துவந் தேர்வு கட்டணம் ரூ.50 லிருந்து 24 மடங்காக உயர்த்தியது மட்டுமில்லாமல் . கூடுதல்  பாடத்தில் கட்டணமில்லாமல் தேர்வு எழுதியவர்களுக்கு புதிதாக ஒரு பாடத்திற்கு 300 ரூபாய் கட்டணமும், உயர்த்தியிருப்பது அதிர்ச்சியளிக்கின்றாது.இதே போன்று  பொதுப்பிரிவினருக்கும் 150 ரூபாய்க்குப் பதில்  300 ரூபாயும் உயர்த்தியிருப்பதும் ஏற்புடையதல்ல.

 மத்திய கல்வி வாரியத்தின் கீழ் படிக்கும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டிய தேர்வுக்கட்டணம் நிர்ணயம் செய்வது வழக்கம். குறிப்பாக 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 9 ஆம் வகுப்பிலும், 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 11 ஆம் வகுப்பிலேயே தேர்வுகட்டணம் செலுத்தாகிவிட்டது.ஆனால் தற்போது வெளியிட்டுள்ள தேர்வுக்கான புதிய கட்டணம்படி மீதித் தொகையினை செலுத்தவேண்டிய நிர்ப்பந்தம்.  எனவே ஏற்கனவே நடைமுறையிலிருக்கும் கல்விக்கட்டணம் தொடர்ந்திடவும் , புதிய ் கட்டண உயர்வை உடனே திரும்ப பெறவேண்டி மத்தியக்கல்வி வாரியத்தினை  தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 9884586716

No comments:

Post a Comment