Pages

Pages

Wednesday, August 7, 2019

6 நாட்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்த தமிழக அரசு! அத்திவரதரால் திணறும் காஞ்சிபுரம்!

கடந்த ஒன்றரை மாதங்களாக தமிழகத்தில் மிகவும் பிரபலமாக இருப்பது காஞ்சிபுரம் அத்தி வரதர் சிறப்பு வழிபாடு தான். கடந்த ஜூலை 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு காட்சியளித்த அத்தி வரதர், கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் நிற்கும் நிலையில் காட்சி அளித்து வருகிறார்.
அத்தி வரதர் இன்னும் சில நாட்கள் மட்டுமே காட்சியளிப்பார் என்பதால் அவரை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. ஆரம்பத்தில் சில மணி நேரங்களில் வழிபட்ட பக்தர்கள் தற்போது அத்திவரதரை வழிபடுவதற்கு நாட்கள் கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதுவரை 60 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தரிசித்த நிலையில், இன்னும் சில நாட்களே இருப்பதால் கூட்டம் கட்டுக்கடங்காமல் வந்துகொண்டிருக்கிறது.

இதனையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏற்பாடுகளை சரிசெய்யவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி ஒரு நாளைக்கு 21 மணிநேரம் தரிசிக்கலாம் எனவும், மேலும் பக்தர்கள் வந்து தங்கி தரிசிக்கும் வண்ணம் கூடாரங்களை அமைக்கவும் மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே நடவடிக்கை எடுத்திருந்தார். இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட அதிகாரிகளுடன் தமிழக அரசு நடத்திய ஆலோசனையில் வரும் நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், கூட்ட நெருக்கடியை சமாளிக்க வருகின்ற 13 மற்றும் 14 மற்றும் 16 தேதிகளில் காஞ்சிபுரம் நகரத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
15 ஆம் தேதி சுதந்திர தினம் என்பதால் அன்று கொடியேற்று நிகழ்ச்சி மட்டும் இருக்கலாம். 17 மற்றும் 18 சனி ஞாயிறு என்பதால் மொத்தமாக ஆறு நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருவதால் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் விழிப்புடன் செயல்பட வேண்டும் என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது, மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும், காஞ்சிபுரம் நகராட்சிக்கு சிறப்பு நிதி வழங்கப்படும் எனவும் தமிழ தமிழக அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment