Pages

Pages

Tuesday, August 13, 2019

கல்வி அதிகாரிகளுக்கு நிர்வாக பயிற்சி: மாமல்லபுரத்தில் 3 நாள்கள் நடக்கிறது

மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கான நிர்வாக பயிற்சி மாமல்லபுரத்தில் 3 நாள்கள் நடைபெறவுள்ளது.இதுகுறித்து பள்ளி கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் வெளியிட்ட அறிவிப்பு: அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட 70 மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உண்டு உறைவிட நிர்வாக பயிற்சி ஆகஸ்ட் 20-இல் தொடங்கி 22-ஆம் தேதி வரை 3 நாள்கள் சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது.கடிதம் பெற்ற அதிகாரிகள் ஆகஸ்ட் 19-ஆம் தேதி மாலை, பயிற்சி அரங்கத்தில் தங்கள் வருகையை பதிவு செய்ய வேண்டும். பயிற்சியின் போது மாணவர் சேர்க்கை, பள்ளி கட்டடம் மற்றும் விளையாட்டு மைதானங்கள் உள்பட பல்வேறு விவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு நடத்த உள்ளார். எனவே, அதற்குரிய ஆவணங்களுடன் தவறாமல் பயிற்சியில் பங்கேற்க வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment