Pages

Pages

Wednesday, August 7, 2019

அரசு,அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களில் NEET மற்றும் JEE போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு அவரவர் பள்ளியிலேயே தகுதித்தேர்வு (Screenig Test) நடத்துதல்.


வேலூர் மாவட்டத்தில் உள்ள  அரசு,அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களில் NEET மற்றும் JEE  போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிக்கு  தெரிவு  செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியலை  இவ்வலுவலகத்தில் ஒப்படைக்கும்படி தெரிவிக்கப்பட்டது. தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியலை அனுப்பாத தலைமையாசிரியர்கள் உடனடியாக குறுந்தகடு மற்றும் மின் அஞ்சலில் (velloreceo@gmail.com) அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
NEET மற்றும் JEE பயிற்சி வகுப்புகளுக்கு தெரிவு  செய்யப்பட்ட மாணவர்களுக்கு 07.08.2019 (புதன்கிழமை) இன்று  தகுதி தேர்வு அவரவர் பள்ளிகளில் நடத்தப்பட வேண்டும் தகுதித் தேர்விற்கான வினாக்கள் விடைக் குறிப்புடன் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை 09.08.2019 அன்று மாலை 4.00 மணிக்குள்  குறுந்தகடு மற்றும்  velloreceo@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப  வேண்டும்.
வினாத்தாள் மற்றும் விடை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
படிவங்களை பூர்த்தி செய்யும்போது வானவில் அவ்வையார் Fontல் மட்டுமே பூர்த்தி செய்யும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

No comments:

Post a Comment