Pages

Pages

Wednesday, July 31, 2019

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்விக்கான கட்டணம் ரத்து: அரசாணை வெளியீடு

 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்விக்கான கல்விக் கட்டணத்தை ரத்து செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அரசாணையின் மூலம் 6 முதல் 12ம் வகுப்புகள் வரை ஆங்கில வழிக் கல்விக்கான கட்டணம் ரத்து செய்யப்படுகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வி முறையில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் ரத்து செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தமிழக சட்டப்பேரவையில் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பைத் தொடர்ந்து, இன்று தமிழக அரசின் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment