TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA)
FOUNDER P.K ILAMARAN
Pages
▼
Pages
▼
Thursday, July 11, 2019
தமிழகம் முழுவதும் நாளை நடைபெற இருந்த ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கும் உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
நாளை நடைபெற இருந்த கலந்தாய்வு தேதியை ஒத்திவைக்க பள்ளிக்கல்வித் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. பணிமாறுதல் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணை சட்டவிரோதமானது என மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment