7வது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியம் உயர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இது மிகப்பெரிய அளவில் ஊதிய உயர்வு இருக்கும் என்று கூறப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்படும் என கடந்த 1ம் தேதியே தகவல்கள் வெளியாகின. மத்திய அரசு ஊழியர்களின் தற்போதைய ஊதியத்திலிருந்து 4 முதல் 5 சதவீதம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் குறைந்தபட்சமாக 720 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 10,000 ரூபாய் வரை உயரும். இது ஒருவர் வாங்கும் ஊதியத்திற்கு ஏற்ப மாறுபடும். 7வது சம்பள கமிஷன் படி மத்திய அரசு ஊழியர்கள் பெறும் ஊதியத்தின் அடிப்படையில் அகவிலைப்படி உயர்வு இருக்குமென அனைத்திந்திய கணக்கு தணிக்கை மற்றும் கணக்குகள் வாரியத்தின் இணை செயலாளர் ஹரிசங்கர் திவாரி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிசன் படி 12 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டுவருவதாகவும் 4% அகவிலைப்படி உயர்த்தப்பட்டால் 16% ஆக உயரும் எனவும் எனவே கீழ்நிலை ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ரூ.720 ஆகவும் மேல் நிலை ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ரூ.10,000ஆகவும் உயரும் என ஹரிசங்கர் கூறினார்.
ஊதிய உயர்வு அனைத்து ஊழியர்களுக்கும் ஒரே சதவீத அளவில் இருக்கும்.
7வது ஊதியக்குழுவின் படி புதிதாக பணியில் சேரும் ஒருவர் மாதத்திற்கு ரூ.18000 ஊதியமாக பெறுவார். மூத்த ஊழியர் அதாவது 18வது படி நிலையில் இருக்கும் ஊழியர் ரூ.2லட்சத்து 50000 ஊதியமாக பெறுவார். இதில் மத்திய அமைச்சரவையின் செயலாளரும் இந்த பிரிவில் வருவார்.
அகவிலைப்படி என்றால் என்ன?
ஒரு ஊழியர் பெறும் அடிப்படை ஊதியத்தின் ஒரு பகுதி அகவிலைப்படி. ஊழியரின் வாழும் நிலை மற்றும் மக்களின் வாங்கும் திறனோடு தொடர்புடையது. அவ்வப்போது மத்திய அரசு இதனை மாற்றியமைக்கும். ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தின் படி அகவிலைப்படி கணக்கிடப்படும். தற்போதைய நிலவரப்படி பணியிலிருக்கும் மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வுபெற்ற ஊழியர்களும் 12% அகவிலைப்படி பெறுகின்றனர்
No comments:
Post a Comment