Pages

Pages

Thursday, July 18, 2019

ஆசிரியர்கள் வருகைப்பதிவு பயோ மெட்ரிக் இயந்திரத்தில் இந்தி திணிப்பு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கண்டனம்

ஆசிரியர்கள்  வருகைப்பதிவு பயோ மெட்ரிக் இயந்திரத்தில் இந்தி திணிப்பு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கண்டனம்
மாநிலத்தலைவர்
பி.கே.இளமாறன் அறிக்கை :
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களின் வருகைப்பதிவினை பயோ மெட்ரிக் மூலம் பதிவு செய்திட உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பொருத்தப்பட்டு செயல்பாட்டில் வருகின்றன. தற்போது   பயோ மெட்ரிக் வருகைப்பதிவேடு இயந்திரத்தில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பதிவு வெளிப்பாடு தெரிகிறது.
பயோ மெட்ரிக் இயந்திரம் சோதனைக்கு உட்டபடுத்தப்பட்டுதான் பொறுத்தப்பட்டதா இல்லை இந்தியினை திட்டமிட்டு பள்ளிகளில் திணிக்கும் முயற்சியா என்பது சந்தேகம் ஏற்படுத்துகின்றது தமிழ்நாட்டில் தமிழ் அழிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது குறிப்பாக பள்ளிகளில் இந்திப் புகுத்தப்படுவது கண்டனத்திற்குரியது.  தமிழ்மொழிதான் முதன்மையான மொழி தமிழ்நாட்டில்  தாய்மொழி தமிழுக்கு இழுக்கா?  தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை உடனடி நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன் .
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 98845 86716

No comments:

Post a Comment