Pages

Pages

Wednesday, July 31, 2019

பள்ளிக்கல்வித்துறையில் ரூ.1,627 கோடியினை பயன்படுத்தாததினை கண்டறிந்து நடவடிக்கை எடுத்திடுக. தமிழ்நாடு அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை.

 மாநிலத்தலைவர் 

பி.கே.இளமாறன் அறிக்கை :
 2018 -2019 ஆம் ஆண்டில் பள்ளிக்கல்வித்துறையினை மேம்படுத்திட பல்வேறு நிதி நெருக்கடி இருந்தும் 28,757 கோடியினை அரசு நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்து இருந்தது.அதில் தற்போது ஆண்டு கணக்கு  தணிக்கை அறிக்கையில 2018-2019 ஆம் ஆண்டில்  1,627 கோடி ரூபாய் செலவு செய்யாமல் திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கின்றது.அனைவருக்கும் கல்வித்திட்டத்தில் ஒதுக்கீடு செய்த நிதியில் ரூ. 894 கோடியும்,இடைநிலைக்கல்வி மேம்பாட்டுத்திட்டத்தை செயல்படுத்த ஒதுக்கீடு செய்த நிதியில் ரூ.437 கோடியும் ,சிறப்புக்கூறு திட்டத்தின் கீழ் அனைவருக்கும் கல்வித்திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்த  நிதியில் ரூ.296 கோடியும் ஆகமொத்தம் ரூ 1,627 கோடியினை செலவழிக்காமல் திருப்பப்பட்டிருக்கிறது.
   முறையான திட்டமிடல் இல்லாததால் ஒதுக்கீடு செய்த நிதியினை பயன்படுத்தவில்லை
பள்ளிகளை மேம்படுத்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தொழிலதிபர்கள் முன்னாள் மாணவர்கள் என ஒருபுறம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அழைப்பு விடுக்க மறுபுறம் அரசு ஒதுக்கிய நிதியினை முறையாக பயன்படுத்ததாது அதிர்ச்சியளிக்கிறது.
 பெரும்பாலான பள்ளிகளில் கழிவறைகளை மாற்றியமைத்திருக்கலாம். உள்கட்டமைப்பு வசதிகள் கணினி ஆய்வகம் மொழி ஆய்வகம் உள்ளிட்ட பாடவாரியான ஆய்வககங்கள் மற்றும் மாணவர்களின் நலன்கருதி கண்காணிப்பு கேமராக்கள் கூடுதல் வகுப்பறைகள் என ஏராளமான தேவைகள் இருக்கும் போது ரூ.1,627 கோடியினை செலவழிக்காமலேயே திருப்பி அனுப்பியதற்கான. காரணம் கண்டறிந்து எதிர்காலத்தில் இவ்வாறு நடந்திடாமல் தடுத்திடும் வகையில்  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 98845 86716

No comments:

Post a Comment