Pages

Pages

Wednesday, June 5, 2019

நீட் தேர்வால் தொடரும் உதிரும் உயிர்கள் நீட் தேர்வு விலக்கே நிரந்தர தீர்வு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை

 :
மாநிலத்தலைவர்
பி.கே.இளமாறன் அறிக்கை :
     தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதிய  மாணவிகளில்  தேர்வில் தோல்வி அடைந்ததால் பட்டுக்கோட்டையில் மாணவி வைஷ்யா, திருப்பூரில் ரிதுஸ்ரீ ஆகியோர் இன்று(5.6.19) தற்கொலை செய்து கொண்டது மிகவும்.மனவருத்தத்தை அளிக்கிறது. இத்தேர்வின் முடிவே வாழ்க்கையின் முடிவல்ல என்பதை மாணவர்கள் உணரவேண்டும். பெற்றோர்களும் மருத்துவம் ஒரு படிப்பு தானே தவிர அது ஒன்றும் வாழ்க்கையல்ல என்பதையும் தன்னம்பிக்கையினை ஊற்றி வளர்த்திடவேண்டும்.நேற்று அனிதா இன்று வைஷ்யா,ரிதுஸ்ரீ என உயிர்கள் உதிர்வதை உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டும் அரசும் நிரந்தரத்தீர்வாக நீட் தேர்விலிருந்து விலக்குப்பெறுவதே . எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகின்றேன்.
 பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம். 98845 86716

No comments:

Post a Comment