Pages

Pages

Friday, June 7, 2019

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!


மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் முதலாமாண்டு 2019-20ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. நீட் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இந்த
கலந்தாய்வு நடைபெற்று அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.
படிப்புகள்: 
எம்.பி.பி.எஸ் - 5 1/2 ஆண்டுகள் 
பி.டி.எஸ் முதலாமாண்டு - 5 ஆண்டுகள்
முக்கிய தேதிகள்: 
அறிவிப்பு வெளியான தேதி:07.06.2019 
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 07.06.2019, காலை 10.00 மணி முதல் 
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.06.2019, மாலை 05.00 மணி வரை 
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.06.2019, மாலை 05.00 மணி வரை 
தரவரிசைப் பட்டியல் வெளியாகும் தற்காலிக தேதி: 02.07.2019 
சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் தேதி: 04.07.2019 
மற்ற பிரிவினருக்கான முதற்கட்ட கலந்தாய்வு நடைபெறும் தேதி: 05.07.2019 முதல் 12.07.2019 வரை
விண்ணப்பக் கட்டணம்: 
அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேருவதற்கான கட்டணம்: ரூ.500 
மேனேஜ்மெண்ட் / NRI கோட்டாவில் சேருவதற்கான கட்டணம்: ரூ.1,000
விண்ணப்பிக்கும் முறை: 
ஆன்லைனில், https://www.tnhealth.org/ மற்றும் www.tnmedicalselection.org - போன்ற இணையதள முகவரிகளில் சென்று விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு:
ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு, அந்த விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து அத்துடன் தகுந்த மதிப்பெண் சான்றிதழ் நகல்கள் மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ சென்று சேரும்படி அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The Secretary,
Selection Committee,
162, periyar E.V.R. High Road,
KilPauk,
Chennai - 600 010.
மேலும், இது குறித்த முழு தகவல்களை பெற, http://www.tnhealth.org/online_notification/notification/N19061918.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment