Pages

Pages

Thursday, June 13, 2019

சென்னை மத்திய பாலிடெக்னிக் காலியிடங்களில் சேர்க்கை: விண்ணப்பங்கள் வரவேற்பு



சென்னை தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் முதல் கட்ட கலந்தாய்வு முடிவில் காலியாக இருக்கும் இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
இதுகுறித்து மத்திய பாலிடெக்னிக் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பாலிடெக்னிக் முதல் கட்ட கலந்தாய்வு முடிவில் அமைப்பியல், மின்னியல், மின்னணுவியல் தொடர்பியல், கணினி, இயந்திரவியல், மீனியல், மெரைன் போன்ற துறைகளில் காலியாக உள்ள இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க ஜூன் 21 கடைசி நாளாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment