Pages

Pages

Friday, June 21, 2019

மாணவர்களின் தற்கொலைக்கு ஆசிரியரை பொறுப்பாக்க கூடாது உயர்நீதிமன்றம் தீர்ப்பு வரவேற்புக்குரியது அதே நேரத்தில் உயிர் போனதற்கான காரணத்தை ஆராய வேண்டும். தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை




பி .கே.இளமாறன் அவர்கள் கூறுகையில்  மாணவர்களின் தற்கொலைக்கு ஆசிரியரை பொறுப்பாக்க கூடாது உயர்நீதிமன்றம் தீர்ப்பினை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்கிறது.

அதே நேரத்தில் உயிர் போனதற்கான காரணத்தையும் ஆராய வேண்டும். 
தற்கொலை செய்கின்ற அளவுக்கு மன அழுத்தமே காரணம். அதில் பெற்றோர்-ஆசிரியர்-சமூகமே அம்மாதிரியான சூழலை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக கல்வி மதிப்பெண்களை எடுப்பதற்கு பெரிதும் உதவுகிறதே தவிர தன்னம்பிக்கை ஊட்டும் கல்வியாக இல்லை. 

போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் கல்வியாக மட்டுமில்லாமல் எந்த பிரச்சினையும் சமாளிக்கும் கல்வியாகவும் இருக்கவேண்டும்.

    வாழ்வியல் கல்வியினை கற்றுத்தரவேண்டும். ஒவ்வொரு முறையும் ஏன் விடிகிறது என்பதைவிட எப்போது விடியும் என காத்திருக்கும் பள்ளிக்கூடம் தேவை.

அப்போதெல்லாம் விரும்பி படித்தார்கள். வாரம் வெள்ளிக்கிழமை வந்தால் சந்தோசம் பொங்கும். வெள்ளிமணி நிகழ்ச்சி என்பது வெறும் நிகழ்ச்சி மட்டுமல்ல.
.மாணவர்கள் தங்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்துவதும், ஆடல்,பாடல் பாடி மகிழ்ச்சியினை பகிர்வதோடு தன்னம்பிக்கையோடு புதுசு புதுசாக முயற்சிக்கும் எண்ணத்தில் மனநிறைவோடு படித்தார்கள்.

     கற்பித்தலும்-கற்றலும் புத்துணர்ச்சியோடு நடந்திட உடலும் உள்ளமும் ஒருங்கிணைந்தால் மட்டுமே சிறப்பாக அமையும்.
      மேலும் பெற்றோர்களின் அன்பும் குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை. குழந்தைகளிடம் பேசும் நேரம் குறைந்துகொண்டே
போவதும் காரணம். 

   சமூகவலைத்தளங்கள் ் சமூகம், சரிபாதி தவறான பாதைக்கு வழிவகுக்கிறது.தடுக்க வழியின்றி தவிக்கிறது
     மன அழுத்தம் காரணமாக ஆசிரியரை மாணவர் தாக்குவதும் இயலாத நிலையில் தற்கொலை செய்துகொள்வதும் மாணவர்களின் தவறில்லை. மாறாக மனசினை பக்குவமாக மாற்றிட சமூகம் தவறிவிட்டது.

  இந்நிலையில் கல்விமுறையில் மாற்றம் வேண்டும் மகிழ்ச்சியான கல்விக்கு மாணவர்களை அழைத்துச்செல்ல
வேண்டும். நீதிபோதனை உடற்கல்வியினை ஊக்கப்படுத்தவேண்டும் . மதிப்பெண் முறையில் மாற்றம் மாணவர்களை மையப்படுத்தும் கல்வியாக மனசை உற்சாகப்படுத்தும் பயிற்சியாக தன்னம்பிக்கையினை வளர்கக்கும் வாழ்வியலை உணர்த்தும் கல்வியாக மாறவேண்டும். மாணவர்களை சுதந்திரமாக படிக்க, வாழ வழிகளை அமைத்திட தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன் . 
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்  98845 86716

No comments:

Post a Comment