மாணவர்களின் பாதுகாப்பு-கேள்விக்குறி
------------------------------------
அடிப்படை வசதி-அங்கீகாரமின்றி செயல்படும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அரசுபள்ளிகளில் இணைத்திட வேண்டும்.
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை;
மாநிலத்தலைவர்
பி.கே.இளமாறன் அறிக்கை :
போதிய இடவசதி,கட்டமைப்பு , சுகாதாரம், பாதுகாப்பின்றி அங்கீராமில்லாத 3000 க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் தமிழ்நாட்டில் செயல்பட்டுவருவதாக செய்திகள் அடிப்படையில் சென்னையில் மட்டும் 331 தனியார் பள்ளிகள் அங்கீராமின்றி செயல்பட்டுவருவதை கண்டறிந்து சென்னை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பள்ளிகளின் பட்டியல் வெளியிட்டிருப்பதோடு அப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்விச்சான்றிதழ் தகுதியற்றது என்றும் அரசு நடத்தும் தேர்வுகள் எழுத இயலாது எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஆகையால் இப்பள்ளிகளில் தற்போது படித்துவரும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.
எனவே,இதுபோன்று மாணவர்களின் நலன்கருதி மாநிலம் முழுதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த மாவட்டத்தில் போதிய அடிப்படை வசதியின்றியும் அங்கீராமின்றி செயல்படும் தனியார் பள்ளிகளின் பட்டியலை வெளியிடவேண்டுகிறோம்.
மேலும்,நீக்கமுடியாத வடுவாக அமைந்திட்ட கும்பகோணம் தனியார் பள்ளி தீ விபத்து சம்பவத்தினை கருத்தில்கொண்டும் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைந்திட தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு போதிய வசதி,பாதுகாப்பின்றி செயல்படும் தனியார் பள்ளிகளில் பயின்றுவரும் மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்த்திட. நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகின்றேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 98845 86716
No comments:
Post a Comment