பள்ளிக் கல்வித்துறை பணியாளர் ெதாகுதியின் இணை இயக்குநர் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: அனைத்து அலுவலர்களும் எந்தவித புகாருக்கும் இடம் அளிக்காத வகையில் 30.6.2019 தேதியில் 3 ஆண்டுக்கு மேல் பணியாற்றும்( இளநிலை உதவியாளர் முதல் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலரின் நேர்முக உதவியாளர் வரை) 3.7.2019 அன்று மாவட்ட அளவில் விருப்ப கலந்தாய்வு நடத்தி மாறுதல் வழங்க் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. அனுமதிக்கப்பட்டு காலியாக உள்ள பணியிடங்களுக்கு மட்டுமே மாறுதல் வழங்குதல் வேண்டும். புதிய அலுவலகங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட பணியிடங்களுக்கு பணியிடம் அனுமதித்து அரசாணை பெறப்படும் வரை அப்பணியிடங்களுக்கு எந்த மாறுதலும் வழங்கக் கூடாது.
* 30.6.2019 அன்று உள்ளபடி தற்போது பதவியில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் உள்ள மேற்குறிப்பிட்டுள்ள அமைச்சுப் பணியாளர்களை தங்கள் மாவட்டத்துக்குள் மாறுதல் வழங்கலாம். தற்போது பதவியில் உள்ள 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணியாற்றுவோரை வேறு அலுவலகத்துக்கு கண்டிப்பாக மாற்றம் செய்ய வேண்டும். l 3 ஆண்டுக்கு மேல் பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர், உதவியாளர்களுக்கு இது பொருந்தாது.
* ஒரே அலுவலகத்தில் ஒரு பிரிவிலிருந்து வேறு பிரிவுக்கு மாற்றம் செய்யக்கூடாது. அதை மாறுதலாக கருத இயலாது.
* மாவட்ட கல்வி அலுவலகம் புதியதாக வேறு இடத்துக்கு பணியாளர்களுடன் மாற்றப்பட்டு இருப்பின் அந்த அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மாறுதல் வழங்கத் தேவையில்லை. இருப்பினும், இவ்வாறு நிர்வாக காரணங்களால் பணியிடத்துடன் மாற்றம் பெற்ற பணியாளர்கள் மாறுதல் கேட்டால், அவர்களையும் கவுன்சலிங்கில் கலந்து கொள்ள அனுமதிக்க முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
* தங்கள் வருவாய் மாவட்டத்துக்குள் மாறுதல் செய்யும்போது அருகில் பணியிடம் ஏதும் இல்லாமல் அவர்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் போது அவர்கள் அருகில் உள்ள வேறு மாவட்டத்துக்கு மாறுதல் கேட்டால், அவர்கள் குறித்த விவரங்களை பட்டியலிட்டு இணை இயக்குநர்(பணியாளர் தொகுதி) ஜூலை 5ம் தேதி நேரில் ஒப்படைக்க வேண்டும்.
* தற்ேபாதுள்ள பதவியில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றுவோர் அனைவரும் வேறு அலுவலகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்களா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். 3 ஆண்டுக்கு மேல் பணிபுரியும் எவருக்கும் மாறுதல் அளிக்காமல் இருக்ககூடாது.
இணை இயக்குநர்(பணியாளர் தொகுதி) செயல்முறைகள்.

No comments:
Post a Comment