தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள மொத்தம் 2,144 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூலை 15-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.
தேர்வு தொடர்பான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும். தேர்வு கட்டணமாக எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.250-ம், மற்ற பிரிவினர்களுக்கு ரூ.500 நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவே செலுத்த வேண்டும்.
முக்கிய பாடப்பிரிவுகளில் 110 மதிப்பெண்ணுக்கும், கல்வி முறை பிரிவில் 30 மதிப்பெண்ணுக்கும், பொது அறிவு பிரிவில் 10 மதிப்பெண்ணுக்கும் என மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெற இருக்கிறது.
மேலும் விண்ணப்பிப்பது எப்படி? என்னென்ன தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும்? என்பது தொடர்பான விவரங்களை http://www.trb.tn.nic.in இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment