Pages

Pages

Tuesday, June 18, 2019

NEET counselling 2019: தகுதியானவர்கள் யார்? விண்ணப்பிப்பது எப்படி?


 நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், இந்தியா முழுவதும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான 15% இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டின்படியும், மீதியுள்ள 85% காலியிடங்கள் மாநில அரசுகளுக்கென ஒதுக்கீட்டின்படியும் நிரப்பப்பட உள்ளது.

அதன்படி, எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு நாளை (ஜூன்.19) தொடங்குகிறது. நீட் தேர்வில் அகில இந்திய ஒதுக்கீட்டு பிரிவில்(All India Quota) உள்ள மாணவர்கள் நாளை முதல் 24ம் தேதி வரை இணையதளம் வழியாக ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்கலாம். இந்த நாட்களில் தாங்கள் விரும்பும் கல்லூரிகளின் பெயர்களை மாணவர்கள் அளிக்க வேண்டும்.
இறுதியாக, ஜூன் 25ம் தேதி காலியிடங்களின் அடிப்படையில் உங்களுக்கான கல்லூரியை தேர்ந்தெடுத்து இறுதி செய்ய வேண்டும். மாணவர்களுக்கு கல்லூரிகளை ஒதுக்கும் பணிகளானது ஜூன் 26ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் கவுன்சலிங் 2019: தகுதியானவர்கள் யார்?

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரும், கவுன்சலிங்கிற்கு விண்ணப்பிக்கலாம். நீட் தேர்வில் 50 சதவிகித மதிப்பெண் பெற்றிருந்தால், அவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாகின்றனர். (SC/ST/OBC பிரிவினருக்கு 40 சதவிகிதம், மாற்றுத்திறனாளிகளுக்கு 45 சதவிகிதம்).

விண்ணப்பிப்பது எப்படி?

Step 1: mcc.nic.in தளத்திற்கு செல்க
Step 2: 'ug medical counselling' என்பதை க்ளிக் செய்க
Step 3: 'new registration' க்ளிக் செய்க
Step 4: வேறொரு பக்கம் திரையில் தோன்றும்.
Step 5: தகவல்களை சமர்பியுங்கள்
Step 6: அதன்பிறகு இறுதியாக, பணம் கட்ட வேண்டும்.
முதலில், அனைத்து மாணவர்களும் கவுன்சலிங்கில் பங்கேற்க பதிவு செய்து பணம் செலுத்த வேண்டும். பணம் கட்டிய பிறகு, மாணவர்கள் தங்களுக்கான பாடத்தையும், கல்லூரியையும் தேர்வு செய்யலாம்.
மாணவர்களின் தகுதியைப் பொறுத்து, அவர்களுக்கான சீட் ஒதுக்கப்படும். 

கொடுக்கப்பட்டிருக்கும் நேரத்திற்குள் பணத்தை செலுத்தி, தங்களுக்கான இடத்தை ரிசர்வ் செய்பவர்கள், தேர்வு செய்யப்படுவார்கள். இப்போது, தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள், தங்களது ரிப்போர்ட்டிங் மையத்திற்கு சென்று, ஆவணங்கள் சமர்ப்பித்து, உடற்தகுதியை க்ளீயர் செய்ய வேண்டும். அதன் பிறகு இறுதியாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான இடங்கள் போக, மீதி இடங்கள் அடுத்தடுத்த மாணவர்களுக்கு ஒதுக்கப்படும்.

என்னென்ன ஆவணங்கள் தேவை?

NEET-MDS/PG 2019 நுழைவு கார்டு
NEET-MDS/PG 2019 மதிப்பெண் பட்டியல்
நேஷனாலிட்டி ஆவணம்/பாஸ்போர்ட் அல்லது உயர் கல்வி முடித்த பள்ளியில் இருந்து வெளியேறிய ஆவணம்,
பிடிஎஸ்/எம்பிபிஎஸ் டிகிரி
இன்டர்ன்ஷிப் முடித்த ஆவணம்
Permanent / provisional registration certificate of Maharashtra Medical Council or other State Medical Councils in India/MCI
எம்பிபிஎஸ்/எம்டிஎஸ் முடித்த கல்லூரி அல்லது நிறுவனத்தின் பெயர்.
உடல் ஃபிட்னஸ் ஆவணம்
ஆன்லைனில் பணம் செலுத்தியதற்கான ஆவணம்.


நீட் கவுன்சலிங் 2019: EWS பிரிவு
இந்தாண்டு, முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது EWS (பொருளாதார ரீதியில் பின்னடைவு). இந்த பிரிவின் மூலம், பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களும் NEET UG கவுன்சலிங்கிற்கு விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment