பனப்பாக்கத்தில் பள்ளியில் மயக்கமடைந்த பிளஸ் 2 மாணவி மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
நெமிலி அருகே உள்ள பொய்கைநல்லூரைச் சேர்ந்த தணிகைவேலின் மகள் ராதிகா (17). இவர், பனப்பாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மதியம் மாணவிகள் விளையாட்டு மைதானதுக்கு வரிசையில் சென்றபோது திடீரென ராதிகா மயங்கி விழுந்தாராம். இதையடுத்து ஆசிரியைகள் அவரை உடனடியாக பனப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். தீவிர சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.
அதன் பேரில் ராதிகா, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராதிகா வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து நெமிலி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக அரக்கோணம் மாவட்டக் கல்வி அலுவலர் (பொறுப்பு) புண்ணியகோட்டி கூறுகையில், இச்சம்பவம் குறித்து சனிக்கிழமை பள்ளியில் விசாரணை நடத்த உள்ளதாகத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment