Pages

Pages

Thursday, June 13, 2019

குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 24 கேள்விகள் தவறானவையாம்: ஒப்புக் கொண்டது டிஎன்பிஎஸ்சி

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குரூப் 1 தேர்வில் தவறான கேள்விகள் கேட்கப்பட்டதை ஒப்புக் கொண்டது டிஎன்பிஎஸ்சி.
மார்ச் மாதம் நடைபெற்ற குரூப் 1 தேர்வை சுமார் 68 ஆயிரம் பேர் எழுதினர். இந்த தேர்வுக்கான முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் தவறான கேள்விகள் கேட்கப்படுகின்றன. பதில் இல்லாத பதில் கூறவே முடியாத கேள்விகள் ஏன் கேட்கப்படுகின்றன?
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இதுபோன்ற தேர்வுகளில் குளறுபடிகள் நடப்பதை ஏற்க முடியாது என்று கூறியிருக்கும் நீதிபதி பார்த்திபன், தவறான கேள்விகள் என்பதை சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று காட்டமாகக் கூறியுள்ளார்.
இதையடுத்து, தவறான கேள்விகள் கேட்கப்பட்டது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment