Pages

Pages

Wednesday, May 1, 2019

தகுதித் தேர்வில் தேர்ச்சிப்பெறாத ஆசிரியர்களுக்கு கருணைக்காட்டகூடாது உயர்நீதிமன்றம் தீர்ப்பு வேதனையளிக்கிறது. தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன்

தகுதித் தேர்வில் தேர்ச்சிப்பெறாத ஆசிரியர்களுக்கு கருணைக்காட்டகூடாது உயர்நீதிமன்றம் தீர்ப்பு வேதனையளிக்கிறது. தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத்தலைவர்
பி.கே.இளமாறன் அறிக்கை :  ஆசிரியர்களுக்கு 8 ஆண்டுகள் வாய்ப்பளித்தும் தேர்ச்சிப் பெறாத ஆசிரியர்களுக்கு கருணைக்காட்டகூடாது என்பது உயர்நீதிமன்றம் தீர்ப்பு சரி வரவேற்றாலும்  ஆசிரியர்கள் தரப்பின் நியாயமான கோரிக்கையான  அரசு விதிகளின்படி ஒரு ஆண்டிற்கு இரண்டு முறை தேர்வுகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.அப்படியானால் 16 முறை 8 ஆண்டுகளில் நடந்திருக்கவேண்டும்.  ஆனால் எட்டு ஆண்டுகளில் நான்கு முறை மட்டுமே இதுவரை தகுதித்தேர்வு நடத்தப்பட்டிருக்கிறது.ஆனால் எட்டு ஆண்டுகள்  வாய்ப்பளித்ததாக எப்படி கூற முடியும்  உயர்நீதிமன்றத்தில் தவறான தகவலை பதிவுசெய்யப்பட்டிருக்கிறது

தங்களின் பாடங்களில் திறமையாக சாதித்த ஆசிரியர்கள் எட்டு ஆண்டுகளாக ஒரே பாடத்தினை நடத்திவிட்டு அனைத்துப் பாடங்களையும் தகுதித்தேர்வில் எழுதுபோது பல சிரமங்களை மேற்கொள்ளவேண்டியுள்ளது மேலும்  போதிய வாய்ப்பு வழங்கப்படாமலேயே வாய்ப்பு வழங்கப்பட்டதாக கூறுவது பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள்.ஆகவே 1500 ஆசிரியர்களின் மனநிலையினைக் கருத்தில் கொண்டும் அவர்களை சார்ந்த குடும்பங்களின் எதிர்கால வாழ்வாதாரம்  கருதியும்
மாண்புமிகு. முதலமைச்சர் அவர்கள் சிறப்புகவனம் செலுத்தி கரூணை அடிப்படையில் அரசு நிதி உதவிப்பெறும் பள்ளிகளில் பணிபுரியும் 1500 ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து முழுமையான விலக்கு அளித்து உதவிடும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன்.
பி.கே.இளமாறன் மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 98845 86716

No comments:

Post a Comment