Pages

Pages

Monday, May 20, 2019

ஜூன் முதல் வாரத்தில் இலவச பாடப்புத்தகம்

அனைத்து வகுப்புகளுக்கும், ஆண்டு இறுதிதேர்வுகள் முடிந்து, பள்ளிகளுக்கு, ஏப்., 13 முதல், விடுமுறை அறிவிக்கப்பட்டது. பொதுத் தேர்வு மாணவர்களுக்கு மட்டும், மார்ச்சில் விடுமுறை விடப்பட்டது. 51 நாட்கள் கோடை விடுமுறை முடிந்து, ஜூன், 3ல், மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, ஜூன், 3 துவங்கி, ஒரு வாரத்திற்குள், இலவச நோட்டு மற்றும் பாடப் புத்தகங்கள் வழங்க, பாடநுால் நிறுவனத்துக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், சுயநிதி பாடப்பிரிவு தவிர, மற்ற அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், இலவச நோட்டு மற்றும் பாடப் புத்தகங்கள் வழங்கப்படும்.அதேபோல், 2019ல், பிளஸ் 1, பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, &'லேப்டாப்&'களும் வழங்கப்பட உள்ளதாக, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment