Pages

Pages

Friday, May 10, 2019

கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்தது பாரத ஸ்டேட் வங்கி

தனது கடன்களுக்கான குறைந்தபட்ச வட்டி விகித்தை ஆண்டுக்கு 8.45 சதவீதமாக பாரத ஸ்டேட் வங்கி குறைத்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடனுக்கான குறைந்தபட்ச வட்டி விகிதம் ஆண்டுக்கு 8.5 சதவீதத்திலிருந்து 8.45 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.
இதன் மூலம், குறைந்தபட்ச வட்டி விகிதம் செல்லுபடியாகும் அனைத்து வகையான கடன்களுக்கும், 5 சதவீதப் புள்ளிகள் (0.05 சதவீதம்) வரை வட்டி குறைக்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை (மே 10) முதல் இந்த வட்டி விகித மாற்றம் அமலுக்கு வருகிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் கடனுக்கான குறைந்தபட்ச வட்டி விகித்தை பாரத ஸ்டேட் வங்கி குறைப்பது இது இரணாடாவது முறையாகும்.

No comments:

Post a Comment