Pages

Pages

Saturday, May 25, 2019

ரூ.62 ஆயிரம் சம்பளத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை


சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரடி தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ள 30 ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஜூன் 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஓட்டுநர்
காலியிடங்கள்: 30
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000 + இதர சலுகைககள்.
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: பிசி, எம்பிசி, டிசி, பிசிஎம் பிரிவினர் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.

எஸ்சி, எஸ்சி(ஏ), எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:எழுத்துத் தேர்வு, செய்முறை தேர்வு மற்றும் வாய்மொழி தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:https://www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttps://www.mhc.tn.gov.in/recruitment/docs/not_85_2019eng.pdf என்ற லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.06.2019

No comments:

Post a Comment