Pages

Pages

Sunday, May 26, 2019

3 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம்


தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் விரைவில் 3 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
மாநிலம் முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலிப் பணியிடங்களின் விவரங்கள் குறித்து அறிக்கை வெளியிடுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "வரும் ஜூன் 1-ஆம் தேதி நிலவரப்படி, அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் குறித்த விவரங்களை இந்த மாத இறுதிக்குள் பள்ளிக் கல்வித்துறைக்கு தெரிவிக்க வேண்டும். அதன் அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் விரைவில் 3 ஆயிரம் முதுகலை ஆசிரியர்கள் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.

அதற்கு ஏற்ப பாடம் வாரியாக உள்ள காலிப் பணியிட விவரங்கள் கொடுக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment