எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு 2381 இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அங்கன்வாடிகளில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களை நியமிக்கலாம் என்ற நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது. ஒரு பள்ளிக்கு ஒரு இடைநிலை ஆசிரியர் வீதம் 2381 பள்ளிகளுக்கு,2381 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அங்கன்வாடிகள் திறக்கப்படும் நாளில் இடைநிலை ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளியில் பணியில் சேர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment