Pages

Pages

Tuesday, May 28, 2019

மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடிய ஆசிரியர்கள்: பிளஸ்2 விடைத்தாள் திருத்தியதில் மெத்தனம்! 500ஆசிரியர்களுக்கு அரசு நோட்டீஸ்





தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 19ந்தேதி தொடங்கி நடை பெற்றது. விடைத் தாள்களை திருத்தும் பணிகளில் சுமார் 25 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபட்டனர். சுமார் 60 லட்சம் விடைத்தாள்களைத் திருத்திய இந்த ஆசிரியர்கள் மதிப்பெண்ணை கூட்டும்போது பிழை மற்றும் சில கேள்விகளுக்கு தவறான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
தேர்வு முடிவை தொடர்ந்து, தங்களது மதிப்பெண்களால் திருப்தி அடையாமல், சந்தேகம் அடைந்த சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்திருந்ததாகவும், அதில், மறுகூட்டலுக்கு 4 ஆயிரத்து 500 மாணவர்கள் விண்ணப்பித்ததாகவும் தேர்வுகள் இயக்குநரகம் தெரிவித்திருந்தது.
மாணவர்கள் தாங்கள் பெற்ற விடைத்தாள் நகலை பெற்றதும் அதிர்ச்சி அடைந்தனர். அதில் ஏராள மானோரின் மதிப்பெண் கூட்டலில் தவறு இருப்பதும், பலரது விடைத்தாளில் சரியான முறையில் மதிப்பெண் போடப்படாததும் தெரிய வந்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர் களின் பெற்றோர்கள் தேர்வுத்துறை இயக்குரகத்தில் புகார் அளித்தனர். சுமார் 30 சதவிகித விடைத்தாள் திருத்தம் செய்ததில் தவறுகள் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.
இதுதவிர, 100 மதிப்பெண்களுக்கு 72 மதிப்பெண் பெற்ற மாணவருக்கு 27 மதிப்பெண் பெற்றதாக பிழையாக மதிப்பெண் போட்டது உள்பட பல்வேறு தவறுகள் நடைபெற்றுள்ள வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதன் காரணமாக மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இதையடுத்து, சுமார் 500 ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளுக்கு, தவறுக்கான விளக்கம் கேட்டு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment