Pages

Pages

Saturday, April 27, 2019

அரசு தொடக்கப் பள்ளிகளை தரம் உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை

தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளை தரம் உயர்த்துதல், புதிய தொடக்கப் பள்ளிகளைத் தொடங்குதல் ஆகியவை தொடர்பான கள நிலவரத்தை ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
வரும் கல்வியாண்டில் புதிய ஆங்கில வழி தொடக்கப் பள்ளிகளை தொடங்க பள்ளிக்கல்வி இயக்குநரகம் முடிவு செய்துள்ளது. அவ்வாறு தொடங்கப்படும் புதிய பள்ளிகளுக்கு ஏதுவான இடம், மற்றும் அப்பகுதியிலுள்ள மாணவர்களின் எண்ணிக்கை ஆகியவை குறித்து புவியியல் தகவல் முறைமை (எஐந ஙஅட) -இன் படி ஆராய்ந்து அறிக்கை அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், அரசு தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த போதுமான கட்டடம், வகுப்பறைகள், இட வசதி, விளையாட்டு மைதானம் உள்ளதா என்பதை ஆராய்ந்து அறிக்கை அனுப்புமாறும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment