சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்கும் என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், கலந்தாய்வில் பங்கேற்க, மே 2ம் தேதி முதல் மே 31 ம் வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் கடந்த 2017-ம் ஆண்டு வரை பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வை நேரடியாக அண்ணா பல்கலைக் கழகம் நடத்தி வந்தது. கடந்த ஆண்டு முதல் பொறியியல் கலந்தாய்விற்கு ஆன்லைன் முறையை அண்ணா பல்கலை
அறிமுகப்படுத்தியது.இந்தநிலையில், 2018-19 கல்வியாண்டிற்கான பிளஸ் டூ தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் (ஏப்.19) வெளியான நிலையில், பொறியியல் கலந்தாய்வு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படாமல் இருந்தது.இதுகுறித்து, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், முதல்வருடனான ஆலோசனைக்கு பிறகு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி, பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்கும் என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, பொறியியல் கலந்தாய்வுக்கான அறிக்கை நாளை வெளியாகும். மே 2ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மே 30ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். ஜூன் 16ம் தேதி ரேங்க் லிஸ்ட் வெளியிடப்படும், ஜூலை 3ம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் கலந்தாய்வு நடத்தி வரும் நிலையில், பொறியியல் மாணவர் சேர்க்கை மையத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விலகினார். இதனால், கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து, இந்தாண்டு முதல் முறையாக, தொழில்நுட்பக்கல்வி இயக்குனரகம் சார்பில் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment