Pages

Pages

Monday, April 29, 2019

21.769 மாணவர்கள் தேர்வு எழுதாமல் போனதற்கான காரணத்தினை பள்ளிக்கல்வித்துறை கண்டறிய வேண்டும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை.

21.769 மாணவர்கள் தேர்வு எழுதாமல் போனதற்கான காரணத்தினை பள்ளிக்கல்வித்துறை கண்டறிய வேண்டும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை.மாநிலத்தலைவர்
 பி.கே.இளமாறன் அறிக்கை :
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை நடத்தும் 10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் பள்ளிகளில் 2018-2019 கல்வியாண்டில் படித்துக்கொண்டிருந்தமாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக பதிவுசெய்யப்பட்ட (Nominal Roll) எண்ணிக்கை 9.59618 ஆகும்.ஆனால் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 9.37.849 தான். அப்படி பார்த்தால் 21.769 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்பது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இடைநிற்றல் இடம் மாறிச்சென்றவர்கள் சான்றிதழ் பெற்றவர்கள் சராசரியாக சுமார் 5000 மாணவர்கள் எடுத்துக்கொண்டாலும் மீதமுள்ள 16.769. மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகவே உள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிடாமல் தடுப்பது யார்?  மாணவர்களின் எதிர்காலத்திற்கு என்ன உத்தரவாதம்.  தனியார் மெட்ரிக் பள்ளியில் படிக்கும் மாணவர்களை 100 சதவீதம் தேர்ச்சிக்காக திட்டமிட்டு மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடப்படுகிறதா அல்லது அதிகாரிகளின் 100 சதவீதம் தேர்ச்சிக்காக வலியுறுத்துவதினால் மாணவர்கள் வலுகட்டாயமாக இடையில் நிறுத்தப்படுகிறார்களா?  இது அரசுப்பள்ளிகளிலும் தொடருகிறதா என்பது குறித்தும் பள்ளிக்கல்வித்துறை விரிவான ஆய்வு நடத்திட வேண்டும். ஆண்டுதோறும் தேர்வு எழுதாத மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது. உதாரணமாக கடந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு பதிவுசெய்த மாணவர்கள் 9.64.491 தேர்வு எழுதியவர்கள் 9.50.397.  கடந்த ஆண்டு தேர்வு எழுதாமல் சென்ற மாணவர்கள் 14.094 ஆகும் ,ஆனால் இந்த ஆண்டு21.769 மாணவர்கள் தேர்வு எழுதாததை கணக்கிடும்போது கூடுதலாக 7.675 மாணவர்கள். பள்ளிக்கல்வித்துறை முழுமையாக ஆய்வுசெய்து எதிர்காலத்தில் மாணவர்களின் வாழ்வாதாரமான கல்வியினை காப்பாற்றிடும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகின்றேன்.
 பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 98845 86716

No comments:

Post a Comment