Pages

Pages

Saturday, February 20, 2021

PG PANEL கருத்துரு சமர்பித்தல் வழிகாட்டுதல்கள்

 வழிகாட்டுதல்கள்

 (படிவத்துடன் இணைக்க வேண்டிய ஆவண விவரங்கள்)


கீழ்கண்ட ஆவணங்கள், சான்றுகள், மதிப்பெண் சான்றுகள் மற்றும் பணிப்பதிவேட்டின் நகல்களை அதே வரிசைக்கிரமமாக வரிசைப்படுத்தி, படிவத்தில் பணிப்பதிவேட்டில் பதியப்பட்டுள்ள பக்க எண்களை குறித்து சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

1) பணிப்பதிவேட்டின் முதல் மற்றும் இரண்டாம் பக்கம்

2) முதன் முதலில் பட்டதாரி/ ஆசிரியர் பயிற்றுநர் பணியில் சேர்ந்த ஆணை நகல் மற்றும் அதன் பதிவுகள் மேற்கண்ட பதிவு நகல்

3) முறையான ஆணை நகல், பணிப்பதிவேட்டிலும் பதிவுகள் மேற்கொண்ட நகல்

4) பட்டதாரி/ ஆசிரியர் பதவியில் தகுதிகாண் பருவம் முடித்த ஆணை நகல், பணிப்பதிவேட்டில் பதிவுகள் மேற்கொண்ட நகல்

5) அலகுவிட்டு அலகு வந்தவராயின் அரசுப்பள்ளியில் ஈர்த்துக்கொள்ளப்பட்டதற்கான ஆணை நகல்- பணிப்பதிவேட்டில் பதிவுகள் மேற்கொண்ட நகல்

6) பத்தாம் வகுப்பு சான்று நகல், உண்மைத்தன்மை நகல்  மற்றும் பணிப்பதிவேட்டில் பதிவுகள் மேற்கொண்ட நகல்

7) 12ம்  வகுப்பு சான்று நகல், உண்மைத்தன்மை நகல்  மற்றும் பணிப்பதிவேட்டில் பதிவுகள் மேற்கொண்ட நகல்

8) பணியில் சேர்ந்த பின் உயர் கல்வி பயின்றிருப்பின் முன் அனுமதி நகல் மற்றும் பணிப்பதிவேட்டில் பதியப்பட்ட நகல்

9) இளங்கலை பட்டம்/ தற்காலிக சான்று நகல், மதிப்பெண் சான்றுகளின் நகல், உண்மைத்தன்மை நகல் மற்றும் பணிப்பதிவேட்டில் பதிவுகள் மேற்கொண்ட நகல்

10) முதுகலை பட்டம்/ தற்காலிக சான்று நகல், மதிப்பெண் சான்றுகளின் நகல், உண்மைத்தன்மை நகல் மற்றும் பணிப்பதிவேட்டில் பதிவுகள் மேற்கொண்ட நகல்

11) கல்வியியல் பட்டம்/ தற்காலிக சான்று நகல், மதிப்பெண் சான்றுகளின் நகல், உண்மைத்தன்மை நகல் மற்றும் பணிப்பதிவேட்டில் பதிவுகள் மேற்கொண்ட நகல்

12) வேறுமாநிலத்திலி பயின்றிருப்பின் மதிப்பீடு செய்யப்பட்டதற்கான ஆணை மற்றும் பணிப்பதிவேட்டில்பதிவுகள் மேற்கொண்டமைக்கான நகல்

13) தாய்மொழி தமிழ் இல்லையெனில் தமிழ்நாடு தேர்வாணைத்தால் நடத்தப்படும் மொழித்தேர்வு தேர்ச்சிபெற்றமைக்கான நகல் மற்றும் பணிப்பதிவேட்டில் பதியப்பட்ட பக்க நகல்

14) சார்ந்த ஆசிரியர் மீது கடந்த ஐந்து ஆண்டுகளில் தண்டனை வழங்கப்பட்டிருப்பின் அதன் விவரம், பணிப்பதிவேட்டில் பதிவுகள் பதிவுகள் மேற்கொண்ட பக்க நகல்

15) ஒழுங்கு நடவடிக்கை நிலுவையிலிருப்பின் அதன் விவரம்

16) கடந்த ஆண்டுகளில் தற்காலிகமாக/ நிரந்தரமாக பதவி உயர்வு துறப்பு செய்திருப்பின் அதன் விவரம் மற்றும் பணிப்பதிவேட்டில் பதிவுகள் மேற்கொண்ட பக்க நகல்


                          மேற்காண் நகல்களில் சான்றொப்பமிட்டு படிவத்துடன் இதே வரிசையில் இணைத்து சமர்ப்பிக்கம்படி  அரசு/நகராட்சி உயர் மற்றும்மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


1 comment: